ஓய்வு பெற்றுச் சென்ற அதிபரின் சேவை நலன் பாராட்டு விழா

[victoriacoll.sch.lk - 01 Dec 2010]

யா/விக்ரோறியாக் கல்லூரியில் 24 ஆண்டுகள் சேவையாற்றி ஓய்வுபெற்ற அதிபர் திருமதி அ.வேலுப்பிள்ளை அவர்களின் சேவைநலன் பாராட்டும், புதிய அதிபர் திரு வ.சிறீகாந்தன் அவர்களின் வரவேற்பும் 2010-11-21 ஞாயிற்றுக் கிழமை மு.ப 9:00 மணிக்கு கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவினைக் கல்லூரிச் சமூகம் மிகச்சிறப்பாக ஒழுங்கு செய்து நடாத்தியது. கல்விப்புலத்தைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். அவுஸ்திரேலியா, கனடா போன்ற வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவர் சங்கக் கிளைகளின் ஒத்துழைப்பும் மிகச்சிறப்புற அமைந்தமை குறிப்பிடத்தக்கது. ஓய்வு பெற்ற அதிபர் அவர்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் இருந்து ஆற்றிய அருந்தொண்டுகள் பலராலும் நினைவுகூரப்பட்டன. அத்துடன் புதிய அதிபரின் அயராத உழைப்பால் கல்லூரி மேலும் மெருகூட்டப்படும் என்ற நம்பிக்கைத் தொனி பிரதிபலித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)