135 ஆவது ஆண்டு சிறப்பு மலர் வெளியீடு

[victoriacoll.sch.lk - 04 Nov 2011]

எமது கல்லூரியின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரிச் சமூகம் 2011-10-31 அன்று பி.ப 1:30 மணிக்கு அதிபர் திரு வ.ஸ்ரீகாந்தன் தலைமையில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கொளரவ விருந்தினராக முன்னாள் அதிபர் திருமதி. அ.வேலுப்பிள்ளை கலந்துகொண்டு முதற்பிரதி, சிறப்புப் பிரதிகளை வழங்கிச் சிறப்பித்தார். வெளியீட்டு உரையினை ஸ்தாபகரின் உறவினராகிய திருமதி பகீரதி ஜீவேஸ்வரா ராசனன் ( யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர்) அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார். ஆய்வுரை சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி தமிழ் ஆசான் திரு.ந.குகபரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது. சிறப்பு மலரின் முதற் பிரதியினை திரு.ஈ.எஸ்.பி. நாகரத்தினம் அவர்கள் பெற்றுக்கொண்டார். இறுதி நிகழ்வாக கோரதாண்டவம் எனும் நாட்டிய நாடகம் திருமதி ஸ்ரீதேவி கண்ணதாசன் அவர்களின் நெறியாழ்கையில் வெகுசிறப்பாக அரங்கேறியது

Thanks to: http://www.victoriacoll.sch.lk (School's Old website)