மெல்பேர்னில் பழைய மாணவர் சங்கத்தின் வெள்ளி விழாவும் கலை நிகழ்ச்சியும்

[Virakesari - July 16, 2023]

யாழ் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர் சங்கம் மெல்பேர்னில் கடந்த 25 வருடங்களாக இயங்கி வருகின்றது. இதன் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை NOBLE PARK புனித அந் தோனியார் தேவாலய மண்டபத்தில் நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றன.

news 2023 07 16 jvc osa australia 25 years celeberations

சங்கத்தின் தலைவர் ஸ்ரீகுமாரின் நெறியாள்கையில் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. வளர்ந்து வரும் இளம் இசைக் கலைஞர் செல்வி சாம்பிகா ஈஸ்வரநாதனின் கல்லூரி கீதம். மெல்பேர்னின் புகழ் பூத்த நடனாலயா இசை நடனக்கல்லூரி மாணவிகளின் கண் கவர் நடன நிகழ்ச்சிகள் என்பவற்றைத் தொடர்ந்து சங்கத்தலைவர் ஸ்ரீகுமாரின் வரவேற்புரையுடன் ஏனைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

கடந்த 25 வருடங்களாக வெற்றிகரமாக செயற்பட்டு வரும் மேற்படி பழைய மாணவர் சங்கத்தின் சாதனைகள் பற்றியும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கல்லூரி வளர்ச்சிக்காக ஆற்றி வரும் உதவிகள் பற்றியும் வறிய மாணவர்களுக்கு உயர் கல்வி கற்பதற்கு ஆதரவு அளிக்கும் நோக்குடன் மடிக் கணினி வழங்கப்பட்டமை . பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தூரத்தில் இருந்து பாடசாலைக்கு வரும் வசதி குறைந்த மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி மற்றும் பாட நூல் வழங்கி உதவி யமை, கல்லூரியின் முன்னாள் ஆசிரியை திருமதி ஆசைபிள்ளை நினைவாக கணினிக்கூடம் நிறுவியமை, பின் தங்கிய பாடசாலைகளின் கல்விக்கு உதவியமை பற்றி சங்க உறுப்பினர் வதனா சாய் ஈசன் தனது உரையில் விளக்கினார்.

விசேட நிகழ்ச்சியாக வளர்ந்து வரும் இளம் இசைக்குழு கலைஞர்களான கிரிசிகன், கீர்த்திகன், ஜீவராஜா ஆகியோரின் நெறியாள்கையில் மெல்லிசை விருந்து வழங்கப்பட்டதுடன் சங்க உறுப்பினர் பழனி அதிர்ஷ்ட இலாப சீட்டை நடத்தினார். கல்லூரி நலனுக்காக அந்த நிதி வழங்கப்பட்டது.

யாழ் சுழிபுரம் விக்ரோறிய கல்லூரி யாழ்ப்பாணத்தில் பழமை வாய்ந்த ஒரு கல்லூரியாக செயற்பட்டு வருகிறது இங்கு கல்வி கற்ற பல மாணவர்கள் உலகின் பல நாடு களிலும் குறிப்பாக கனடா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி. லண்டன், ஆகிய நாடுகளில் வாழ்வதுடன் பலர் உயர் பதவிகளை வகித்தும் வருகின்றனர். அவர்கள் தாம் கல்வி கற்ற பாடசாலையை வளர்க்கும் நோக்குடன் பல் வேறு உதவிகளை வழங்கி வருகின்றமை பாராட்டுக்குரியது. வெள்ளி விழா நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவன் ஜெயமனோகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். யாழ். சுழிபுரம் விக்ரோறிய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாட்டை அங்கு வந்திருந்த அனைவரும் பாராட்டினர்.

நன்றி: