யாப்பு

யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா

01. பெயரும் பணிமணையும்:

  1. இச்சங்கம் யா/விக்ரோறியாக் கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா என அழைக்கப்படும். (இனி இது “சங்கம்” என்றே குறிக்கப்படும்).
  2. இச்சங்கத்தின் பணிமணை தற்காலிகமாக 4337, லீ டிறைவ், மிசிஸ்ஸாகா, கனடா, L4X 4A9

02. நோக்கங்கள்:

இச்சங்கத்தின் நோக்கங்கள் வருமாறு:

  1. இக்கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுதல்
  2. கல்லூரியின் சிறப்பியல்புகளையும் நலங்களையும் மேம்படுத்தல்.
  3. கல்லூரிக்கும் உறுப்பினர்க்கும் இடையில் உணர்வு பூர்வமான நெருங்கிய உறவை பேணி வளர்த்தல்.
  4. சங்க உறுப்பினர் மத்தியில் ஒற்றுமையையும் கூட்டுறவையும் முன்னெடுத்துச்செல்லல்.

03. உறுப்புரிமை:

  1. உறுப்புரிமை இருவகைப்படும். அதாவது
    1. சாதாரணம்
    2. இணை
  2. சாதாரண உறுப்புரிமை:
    1. கனடாவில் நிரந்தரமாக வசிக்கும் கல்லூரியின் பழைய மாணவர்களும், முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் அதிபர்கள் சங்கத்தின் சாதாரண உறுப்பினர்களாக சேர்ந்துகொள்ள தகுதியுடையோராவர்.
    2. உறுப்புரிமைக்கு தகுதியுடைய ஒருவர் வருடாந்த சந்தாவாக டாலர் 25 செலுத்தி அவரது விண்ணப்பம் ஆட்சிக்க்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அவர் உறுப்பினராக கருதப்படுவார். உறுப்புரிமை உடையவர்கள் வாக்களிக்கத் தகுதியானவர்கள்.
    3. எந்த உறுப்பினரும் வருடச் சந்தா டாலர் 25ஐ ஆடி 31ம் திகதி அன்றோ, அதற்கு முன்னரோ செலுத்தியிருப்பின் மட்டுமே தொடர் ஆண்டில் சாதாரண உறுப்பினராக கருதப்படுவார்.
  3. இணை உறுப்புரிமை:
    1. உறுப்பினரின் வாழ்க்கை துணைவர்/ துணைவி பழைய மாணவ மாணவிகளும் அவர்களின் துணைவர்/துணை வருடச் சந்தா டாலர் 25 செலுத்தியிருப்பின் இணை உறுப்பினரென கருதப்படுவார்கள்.
    2. அவர்களுக்கு வாக்குரிமையையை தவிர மற்ற உரிமைகள் உண்டு. ஆனால் அவர்கள் பழைய மாணவ / மாணவியாக இருப்பின் அவர்களுக்கு வாக்குரிமையுண்டு.
    3. உறுப்பினரின் வாழ்க்கைத் துணைவர் துணைவி வருடச் சந்தா செலுத்தத் தேவையில்லை.
    4. அமெரிக்காவில் வசிக்கும் பழைய மாணவ மாணவிகளும் டாலர் 25 செலுத்தி இணை உறுப்பினராகச் சேரலாம்.
    5. நலம் விரும்பிகள் டாலர் 25 செலுத்தி இணை உறுப்பினராகச் சேரலாம்.
  4. ℹ️ உறுப்பினர் கட்டணம் செலுத்தும் விருப்பங்கள்:
    1. உறுப்பினர்கள் ஆண்டுதோறும் சந்தா செலுத்தும் ஆண்டு உறுப்பினராக அல்லது ஒரே முறையில் 250 டாலர் செலுத்தும் ஆயுள் உறுப்பினராக சேர்ந்துகொள்ளும் விருப்பத்தை தேர்வு செய்யலாம்.
    2. வரவிருக்கும் உறுப்பினர் ஆண்டிற்கு செயலில் உள்ள உறுப்பினராக இருக்க, ஆண்டு உறுப்பினர்கள் தங்களது சந்தாவை ஜூலை 31ற்குள் புதுப்பிக்க வேண்டும்.
    3. ஆயுள் உறுப்பினர் கட்டணம் ஒருமுறை செலுத்தப்படுவதால், அதன் பிறகு மீண்டும் சந்தா செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
  5. 🆕 குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் உறுப்புரிமை:
    1. விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் சங்கத்தில் உறுப்பினராக சேர தகுதியுடையவர்கள்.
    2. விண்ணப்பதாரர் கனடாவில் தாங்கள் வசிக்கும் மாகாணத்தில் நிர்ணயிக்கப்பட்ட பெரியோர் வயதைக் (18 அல்லது 19 வயது) கடந்திருக்க வேண்டும்.
    3. இந்த விதிக்குள்ளாக வரும் அனைத்து உறுப்பினர் விண்ணப்பங்களும் செயற்குழுவால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

04. சங்கத்தின் அலுவலர்கள்:

சங்கத்தின் அலுவலர் வருமாறு:

  • தலைவர்
  • உபதலைவர்
  • செயலாளர்
  • உபசெயலாளர்
  • பொருளாளர்
  • உபபொருளாளர்
  • கணக்காய்வாளர்
  • நிருவாக சபை உறுப்பினர்கள் (7 பேர்)
  • விளையாட்டு செயலாளர்கள் (அதிகபட்சம் 3 பேர்)
  • பத்திராதிபர்கள் (அதிகபட்சம் 3 பேர்)
  • வலைத்தள நிர்வாகிகள் (அதிகபட்சம் 2 பேர்)
  • ஆலோசகர்கள் (வாக்குரிமையை உபயோகிக்கமாட்டார்)
  • போசகர்கள் (வாக்குரிமையை உபயோகிக்கமாட்டார்) (3 பதவிகள்)

05. அலுவலர்களின் பொறுப்புகள்:

01. தலைவர்

  1. சங்கத்தின் சகல பொதுக்கூட்டங்களுக்கும். ஆட்சிக்குழு கூட்டங்களுக்கும் தலைவர் தலைமை தாங்குவார்.
  2. கூட்டம் ஒன்றிற்கு தலைவர் சமூகம் தராதவிடத்து உபதலைவர் தலைமை தாங்குவார்.

02. செயலாளர்

அவர் பின்வருவனவற்றின் பாதுகாப்பிற்கும். பராமரிப்பிற்கும் பொறுப்பாவர்.

  1. ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பதிவேடு.
  2. சங்கத்தின் பொதுக்கூட்டங்களையும் ஆட்சிக்குழு கூட்டங்களதும் அறிக்கைகளை உள்ளடக்கிய குறிப்புப் புத்தகம்.
  3. வருடாந்த அறிக்கைகள்.
  4. சங்கத்துடன் தொடர்புடைய ஏனைய ஆவணங்கள்.
  5. சங்கத்தின் பொதுக்கூட்டங்களையும் ஆட்சிக்குளு கூட்டங்களையும் கூட்டுவதற்கு செயலாளர் பொறுப்பு உரிமை உடையவர்

03. பொருளாளர் / உப பொருளாளர்

  1. சங்கத்திற்குச் சேர்மதியான சகல பணம். நிதி ஆகியவற்றை ஏற்று சரியான கணக்கிளை வைத்திருப்பதற்கும் ஆட்சிக் குழுவின் அங்கீகாரத்துக்கு ஏற்ப கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் தகுதியுடையவர்.
  2. ஆடி 31ம் திகதியில் முடிவடைந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கையிடப்பட்ட கணக்கறிக்கையினை வரவிருக்கும் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
  3. 🆕 உறுப்பினர் விபரங்கள் பாதுகாக்கும் பொறுப்பு செயலாளருக்கு இருந்தாலும், புதிய உறுப்பினர் சேரும் போதும் அல்லது உறுப்பினர் செயலிழக்கும் போதும் அந்த விபரங்களை செயலாளருக்கு உடனடியாக வழங்குதல் பொருளாளரின் பொறுப்பு ஆகும்.

04. ஆலோசகர்கள்

  1. 🆕 தற்போதைய தலைவர், புதிய குழுவில் எந்த பதவியையும் வகிக்கவில்லை என்றால், அடுத்த குழுவிற்கு ஆலோசகராக தானாகவே அமைவார்.
  2. 🆕 கடந்த தலைவர்கள், தற்போதைய குழுவில் வேறு பதவியில் இல்லாதவர்களாகவும், ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், தானாகவே ஆலோசகராக அமையலாம்.
  3. 🆕 ஆலோசகர்களின் எண்ணிக்கைக்கு எல்லை இல்லை.
  4. 🆕 சங்கத்திற்கு தேவையான நிபுணர்களை ஆலோசகராக நியமிக்க, ஆண்டு பொதுக்கூட்டத்தில் பரிந்துரை செய்து, உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தெரிவு செய்யலாம்.
  5. ஆலோசகர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை; எனினும், அவர்கள் சங்கத்தின் நோக்கத்தையும் பணி வழிமுறைகளையும் ஆதரிக்கும் வகையில் ஆலோசனை கருத்துகளை வழங்குவதற்காகக் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

05. போசகர்கள் (Patrons):

  1. 🆕 சங்கத்தில் மூன்று போசகர்கள் பதவிகள் இருக்கலாம்.
  2. 🆕 புதிய குழுவால், ஆண்டு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு முதல் இரண்டு கூட்டங்களுக்குள், போசகர்களை நியமிக்க வேண்டும்.
  3. 🆕 சங்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியவர்களையும் தொடர்ந்து வழிகாட்டல் மற்றும் ஆதரவு வழங்கக்கூடியவர்களையும் தேர்வு செய்வதற்குப் பொறுப்பானது செயற்குழுவாகும்.
  4. 🆕 போசகர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லை மற்றும் அவர்கள் குழுக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை; எனினும், அவர்கள் வழிகாட்டல் சங்கத்திற்கு பயனுள்ளதாகக் கருதப்படும் போது, கலந்துகொள்ள அழைக்கப்படலாம் மற்றும் ஆலோசனைகள் வழங்கலாம்.

06. ஆட்சிக்குழு:

  1. மேற்குறித்த அலுவலர்களுடன் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட வேறு 7 உறுப்பினர்களையும் கொண்டதான ஆட்சிக்குழுவிடம் (இனி இது குழு என்றே குறிக்கப்படும்) சங்கத்தின் நிர்வாகம் பராதினப்படுத்தப்பட்டிருக்கும்.
  2. முறையாகக் கூட்டப்பட்ட ஆட்சிக்குழுவின் கூட்டத்திற்கான நிறைவெண் 6க அமையும்.
  3. அவசியம் ஏற்படும்பொழுது செயளாளர் தேவையின் பிரகாரம் அல்லது தலைவரின் கோரிக்கை பிரகாரம் அல்லது குழுவின் 6கு குறையாத உறுப்பினர்களின் கையெழுத்து மூலமான கோரிக்கையின் பிரகாரம் குழுவின் கூட்டத்தைக் கூட்டுவார். குழுவின் உறுப்பினர்களுக்கு 5 நாள் அவகாசம் கொடுக்கவேண்டும். தொலைபேசியிலும் அறிவிக்கலாம்.
  4. குழு அங்கத்தவர் எவரேனும் தகுந்த காரணம் இன்றி தொடர்ந்து மூன்று குழுக்கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறினால் குழு அங்கத்துவத்தை இழந்தவராகக் கருதப்படுவார்.
  5. அடுத்துவரும் ஆண்டுப் பொதுக்கூடத்திற்கு முன்னர் குழுவில் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பும் அதிகாரத்தை குழு கொண்டதாக அமையும்.
  6. மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஆட்சிக்குழுக் கூட்டம் நடைபெறவேண்டும்.

07. பொதுக்கூட்டம்:

01. ஆண்டு பொதுக்கூட்டம்

  1. செப்டெம்பர் 10 திகதிக்கு முன்னர் ஆண்டுப் பொதுக்கூட்டம் சதாரணமாக நிகழும்.
  2. செயலரின் அறிக்கையும், பொறுளாளரின் ஆய்விடப்பட்ட கணக்கறிக்கையும் இப்பொதுக்கூட்டத்தில் சமர்பிக்கப்படும்.
  3. ஆண்டுப்பொதுக்கூட்டதில் சமர்பிக்கப்படவிருக்கும் தீர்மான முன்னறிவித்தல் ஆகஸ்ட் 10ம் திகதிக்கு முன்னர் செயலாளருக்கு கிடைத்தல் வேண்டும். அதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் அறிவுறுத்தல்களை ஏற்பது ஆட்சிக் குழுவின் முடிவாகும்.
  4. பொதுக் கூட்டத்தில் மறுவருடத்துக்கு வேண்டிய சகல அலுவலர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

02. விசேட பொதுக்கூட்டம்

விசேட பொதுக்கூட்டம் ஒன்று செயலாளரால் ஆட்சிக்குழுவின் விதிப்புரையின் பெயரில் அல்லது காரணம் குறித்து முப்பதுக்கு குறையாத உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை விடுக்கும் இடத்து கூட்டப்படும்.

03. நிறைவெண்

முறைப்படி கூட்டப்படும் பொதுக் கூட்டத்திற்க்கு நிறைவெண் முப்பதாகும்.

04. அறிவித்தல் காலம்

எந்தப் பொதுக்கூட்டத்திற்கும் 15 நாள் முன்னறிவித்தல் கொடுத்தல்வேண்டும்.

08. சங்கத்தின் நிதிகள்

  1. சங்கத்தின் ஆட்சிக்குழுவினால் நிர்மானிக்கப்படும் வங்கியில் சங்கத்தின் பெயரில் உள்ள நிதி வங்கிக்கணக்கில் இடப்படவேண்டும்.
  2. பொருளாளர் டாலர் 100கு மேற்பட்ட தொகையைத் தமது பொறுப்பில் வைத்திருத்தல் கூடாது.
  3. நிதி சேர்க்க அங்கீகரிக்கப்பட்ட குழு அங்கத்தவர் கையிருப்புப் பணத்தை 5 நாட்களுக்குள் வங்கியில் விக்ரோறியாக் கல்லூரி பழைய மாணவர்கள் கணக்கில் இடவேண்டும்.

09. கணக்காய்வு

  1. ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்படும் கணக்கு பரிசோதகர் சங்கத்தின் அனுமதியுடன் கணக்குகளை பரிசோதிப்பார்.
  2. அவர் 15 நாட்களுக்குள் கணக்கை பரிசோதித்து ஆட்சிக்குழுவிடம் சமர்பிக்கவேண்டும்.

10. விதிகளுக்கான திருத்தங்கள்

  1. இந்த யாப்பின் எந்தப்பகுதியையும் பொதுக்கூட்டத்தின் சிறப்புத் தீர்மானத்தின் மீது அன்றி மாற்றவோ. திருத்தவோ முடியாது.
  2. அத்தகைய தீர்மானங்கள் கூட்டத்திற்கு சமூகமளிக்கும் மொத்த உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டிருத்தல் வேண்டும்.

11. அமைப்பு விதிகளுக்கு உட்படாத விடயங்கள்

  1. இவ்வமைப்பு விதிகளும் உள்ளடக்கப்படாத விடயங்கள் பற்றி தீர்மானிக்கும் அதிகாரம் குழுவுக்கு உண்டு.
  2. அத்தகைய தீர்மானங்கள் அடுத்துவரும் பொதுகூட்டத்தில் அங்கீகரிப்பதற்காக சமர்பிக்கப்படல் வேண்டும்.

இந்த யாப்பு, தற்போதைய சங்கத்தின் பெயர், உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் பயன்பாட்டில் உள்ள பதவிப் பெயர்களைப் பிரதிபலிக்கும் சிறிய திருத்தங்களுடன், மூல ஆவணத்தின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். புதிய விதிகள் (🆕 குறியீட்டுடன்) சேர்க்கப்பட்டுள்ளன. மற்றும் இவை 2025 ஜூலை 27ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு உறுப்பினர்களால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.